தென்மொழி பதிப்பகம்
பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் தன் 13 ஆம் அகவையிலிருந்து பாடல்கள் எழுதத் தொடங்கி அவற்றை நூலாக்குகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். கையெழுத்து இதழாகவே மல்லிகை எனும் பெயரில் இதழை நடத்தி வந்தார். பின்னர் 1956-இல் புரட்சிப் பாவலர் பாவேந்தர் அவர்களின் முழு அரவணைப்புடன் கொய்யாக்கனி எனும் நூலை வெளியிட்டார். தென்மொழி வெளியீடுகளாகவே அதன் பின்னர் ஐயை, பாவியக் கொத்து, எண்சுவை எண்பது - எனப் பல நூல்கள் வெளிவந்தன. அதன் பிறகு வெளிவந்த நூல்களையெல்லாம் 1982 இல் தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம் - என்ற பெயரில் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்தார்.
1995 - இற்குப் பிறகு அதாவது பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் மறைவுக்குப் பிறகு பாவலரேறு ஐயாவின் நூல்களெல்லாம் வெளியிடப்பெறுகிற முயற்சிக்குத் தென்மொழி பதிப்பகம் எனப் பெயரிடப்பெற்றுச் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கள் அனைத்தும் இந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பெறுகின்றன.
இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் முழு எழுத்தடைவுகளும் இன்னும் ஓரிரு மாதங்களில் 15 தொகுப்புகளாக வெளிவர இருக்கின்றன.
முகவரி: தென்மொழி பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம், 1, வடக்குப்பட்டு சாலை, மேடவாக்கம் கூட்டு சாலை, சென்னை, தமிழ்நாடு - 600100.
தொடர்புக்கு: +91 86080 68002, +91 90929 48002
தென்மொழி பதிப்பகம்
Rs.1,215.00 Rs.1,350.00