








அருங்கலைச்சொல் அகரமுதலி - ஆங்கிலம் - தமிழ் | Arungalaichchol Agaramuthali - English - Tamil
Rs.1,080.00 Rs.1,200.00
Tags:
பல்வேறு தலைச்சொற்களின் வடிவங்களையும் ஆராய்ந்து திரட்டி இவ்வகர முதலி உருவாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள தலைச்சொற்களின் பல்வேறு இயல்புகளையும் ஆராய்ந்து தொகுத்துள்ளமை பெரிதும் கருதத்தக்கது. இன்றைய அறிவியல் சூழல்களுக்கு ஏற்றவாறு உருவான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச்சொற்களை உருவாக்கம் செய்து தந்திருப்பது இதன் சிறப்பாகும்.
வேர்ச்சொல் அடிப்படையிலான பல கலைச்சொல்லாக்கங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கலைச்சொல்லின் பொருளும் வரலாறும் இத்தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரிய கலைச்சொற் களஞ்சியமாகவும், பென்னம் பெரிய இருமொழிக் களஞ்சியமாகவும் திகழும் இத்தொகுதியில் 135 துறைகளுக்குரிய ஓரிலக்கத்து இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் அகரநிரல் பெற்றுள்ளன என்பது இதன் பெருமையையும் பயன்பாட்டையும் விளக்கும்.
Choose Quantity
Specifications
நூல் விவரங்கள் / Product Details
- Book ConditionBinding Copy
- பக்கங்கள்1216
- Binding TypeHardcover
- படைப்பாசிரியர் / தொகுப்பாசிரியர்சொல்லாய்வறிஞர் ப. அருளியார்
- மொழிதமிழ் - ஆங்கிலம்
- Edition number2
- முதற்பதிப்புமே 2002
- மறுபதிப்புசெப்டம்பர் 2012
- பதிப்பகம்தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- Book Categoryஇலக்கியம்
- ISBN-10 / ISBN-1381-7090-301-7