தழல் தேன்மொழி

Wednesday, April 26, 2023 07:16 PM



படைப்பு நோக்கம்‌ கொள்கை: 

உலகம்‌ முழுமையும்‌, என்‌ உறவு: வேறுபாடற்ற உணர்வுடன்‌ 'தமிழ்‌' என்ற தாய்மொழியால்‌ உலகுடன்‌ இணைதல்‌.


நூல்கள்‌: 

திருமணம்‌? பூப்பு நீராட்டு விழா குமுகத்‌ தேவையா?
தமிழின விடியல்‌ (கையெழுத்துப்‌ படிகள்)
விளைவு (பா நூல்‌) 
'தழல்‌' திங்களிதழ்‌ ( 50 வரை )
நம்‌ மானம்‌?! (குமுகத்‌ திருத்த நூல்‌)



சிறப்பு : 

தவறுகளை மனம்‌ நோகாமல்‌ திருத்துதல்‌, எவ்வொருவரின்‌ வினைகள்‌ - சிறப்புகளையும்‌ பாராட்டி மேம்படுத்துதல்‌
அன்பு - அறிவு - பண்பு என்ற மூன்று அறக்கருவிகள்‌ மூலம்‌ அனைவரையும்‌ அரவணைத்தல்‌; தேவைக்கு மேல்‌ பொருள்‌ விரும்பாமை, வணிக நோக்கம்‌ இன்றி ஆக்கம்‌ கருதி அளவு - நேர்மையுடன்‌ பொருள்‌ ஏற்றல்‌


பிறந்த நாள்‌ இடம்‌: 04-05-1957, சேலம்‌ குகை
இறந்த நாள்‌ இடம்‌: 14-09-2020, புதுச்சேரி
பெற்றோர்‌: தாமரை அம்மையார்‌, பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌
கல்வி : B.Sc., M.A., M.Phil
துணைவர்‌: ப. அருளியார்‌
பிள்ளைகள்‌ : இரு மகன்கள்‌


எல்லா வகையிலும்‌ என எண்ணத்தைச்‌ செலுத்தி, ஒரு சார்பற்ற நிலையினைத்‌ தவிர்த்து நூற்றுக்கு நூறு நடுவுநிலையினின்றெழும்‌ தேன்மொழியின்‌ அறிவுமுழக்கம்‌ கேட்போர்‌ செவியைக்‌ கிளறி விழிப்பூடூம்‌ என்பதில்‌ ஐயமில்லை.
-- பேரா. அறிஞர்‌ திரு. ம. இலெ. தங்கப்பா ஐயா



மகள்‌ தேன்மொழியின்‌ அறச்சீற்றம்‌ பக்கத்திற்கு பக்கம்‌ தழலாகத்‌ தகிக்கிறது. கண்ணகியின்‌ அறச்சீற்றம்‌ பாண்டியனின்‌ வளைந்த செங்கோலை நிமிர்த்தியது. மதுரையைச்‌ சுட்டெரித்தது. தேன்மொழியின்‌ அறச்சீற்றம்‌ தமிழ்க்‌ குமுகாயத்தில்‌ பரவியுள்ள தீமைகளை சுட்டெரிக்குமாக!
-- தோழர் பழ. நெடுமாறன்‌ 

Tidy Life Reads

Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.